இக்கனவான் அரசியல்வாதி மங்கள சமரவீரவுக்கு எமது இதயபூர்வமான அஞ்சலி-சிவாஜிலிங்கம்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பிற்கு, தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீரவின் இழப்பு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் கனவான் அரசியல்வாதியான மங்கள சமரவீர இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று உறுதியாக கூறியவர். பல்லின, பல்மத நாடு என்று உரத்துச் சொன்ன குரல்.

மங்களவின் குரல் அரசியல் தீர்வுக்காக வெண்தாமரை இயக்கத்தை தீவிரமாக செயற்படுத்தியவர்.

தெற்கில் தேவேந்திர முனையில் பிறந்த மங்கள, வடக்கில் வல்வெட்டிதுறை முனையில் உள்ள உலக சாதனை வீரன் ஆழிக்குமாரன் நினைவுச் நீச்சல் தடாகத்தை 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணித்து திறந்து வைத்தவர்.

மங்கள சமரவீர இன மத பேதங்களை கடந்து செயற்பட்டவர்.

நாட்டில் பல ஜனாதிபதிகளையும், பிரதமர்களையும் உருவாக்கிய கிங்மேக்கர் மங்கள சமரவீர.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு, போரில் பொதுமக்கள் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு எதிராக 2007ஆம் ஆண்டு அரசு தரப்பிலிருந்து எதிர்க்கட்சி தரப்புக்கு வந்தபொழுது அரசு தரப்பினர் பாராளுமன்றத்தில் வெளியேறிய மங்கள சமரவீர, அனுர பண்டாரநாயக்க, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரை தாக்க முற்பட்ட போது, மனித கேடயங்களாக நின்று நாம் தடுத்து நிறுத்தினோம்.

அமரர் மங்கள சமரவீரனால் ஆட்சிபீடம் ஏறியவர்கள், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறி விட்டனர்.

மங்கள சமரவீர நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளில் இருந்து இருந்தால் இனப்பிரச்சினையை தீர்க்க கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து இருக்கும்.

இனமத பேதமற்ற அரசியல் தீர்வுக்காக போராடிய அமரர் மங்கள சமரவீர கொடிய கொரோனா என்ற அரக்கனினால் கொல்லப்பட்டதற்கு தமிழ் மக்கள் சார்பில் எமது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றோம- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *