நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் வேளை 03வது கொரோனா தடுப்பூசி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நாட்டில் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒக்டோபர் மாதம் அளவில் நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றும் பணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு இம்மாத இறுதியளவில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்சமயம் ஒரு கோடியே 20 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் கொவிட் டோஸ் ஏற்றப்பட்டுள்ள அதேவேளை, இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டோரின் மொத்த எண்ணிக்கை 60 இலட்சத்தைக் கடந்திருப்பதாகவும் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.





