கொரோனா தொற்றுக்கெதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனிநபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படுமென்று சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செப்டெம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதனடிப்படையில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 161,650 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் இதுவரை (நேற்றிரவு) 5,949,431 இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





