நன்னீர் மீன் பிடியாளர்களுக்கு வள்ளங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள கடந்த காலங்களில் யானைகளின் தாக்கம் காரணமாக சேதமடைந்த வள்ளங்களின் உரிமையாளர்கள் மற்றும் வள்ளமொன்றை பெற பொருளாதார வசதியற்ற தெரிவு செய்யப்பட்ட 07 பயனாளிகளுக்கான வள்ளங்கள் இன்று(25) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துகோராளவினால் மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு வள்ளமொன்றை கொள்வனவு செய்ய 55000 ரூபாய் அரசாங்கத்திற்கு செலவாகியுள்ளது.

இக்கட்டான நிலையில் மீனவ தொழிலை மேற்கொள்ளும் தாங்கள் போன்றவர்களுக்கு உரிய வள்ளங்களை வழங்க முன்வந்தமை குறித்து அரசாங்கத்திற்கு நன்றிகளை இதன்போது பயனாளிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, மொரவெவ பிரதேசபை தவிசாளர், இலங்கை தேசிய நீர் உயிரின வளங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தர் ஏ.பி.அத்தாவுட உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *