
இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 4 இலட்சத்தைக் கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று வரையில், நாட்டில் தொற்றாளர் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து 801 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகிய நிலையில், மேலும் 4 ஆயிரத்து 484 பேருக்கு தொற்று உறுதியானமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 3 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 163 பேர் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 48 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 750 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




