தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பாடகர் இராஜ் வீரரத்ன அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா தொடர்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவர் இன்று(25) கடிதம் அனுப்பியுள்ளார்.
தனிப்பட்ட வேலைகள் உள்ளமை காரணமாக இந்த முடிவினை தான் எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவால், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (NYSC) பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.





