ஹிங்குரக்கொட காவல்துறை பிரிவுக்குற்பட்ட கவுடுல்ல பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக, மலர் வளையம் ஒன்றை வைத்த விவகாரம் தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஆத்மா சாந்தியடையட்டும் என்ற அர்த்தத்தை உணர்த்தும் வகையில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட மலர் வளையம் ஒன்று குறித்த வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் குறித்த வீட்டின் உரிமையாளர் ஹிங்குரக்கொட காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





