மாத்தறை-அக்குறஸ்ஸ பிரதான வீதியில் மண்ணெண்ணை பௌசர் ஒன்று இன்று புதன்கிழமை பகல் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் சுமார் 13ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணையுடன் பயணித்த பௌசரே இவ்வாறு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு மண்ணெண்ணெய் வீதியில் கசிந்ததால் அதனை சேகரிக்கும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.
பௌசரின் பின்புற சில்லுகள் வெடித்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது.
மேலும் இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





