சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹணவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் போலியானவை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
மேலும் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
அத்தோடு அவரின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்றைய தினம் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய் தினம் சில ஒளிப்படங்களும் காணொளியும் சமூக வலைப்பக்கங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
எனினும் இந்நிலையிலேயே பொலிஸ் தலைமையகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





