லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஹோலிருட் தோட்ட கீழ் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குளவி கொட்டுக்கு இலக்கான அவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்தார்.
அத்தோடு உயிரிழந்தவர், 4 பிள்ளைகளின் தந்தையான 73 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் லிந்துலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





