பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் கைது!

கர்நாடகாவில் உள்ள மாவட்டம் ஒன்றில் கைபேசிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதுடன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடகா மாநிலம் – ராய்ச்சூர் மாவட்டம் சக்திநகரில் உள்ள ஒரு படாசாலையில் தலைமை ஆசிரியராக வி.கே.அங்கடி என்பவர் பணியாற்றி வருகிறார்.

குறித்த தலைமை ஆசிரியர் வி.கே.அங்கடி பாடசாலையில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வி.கே.அங்கடி வாங்கி வைத்திருந்தார்.

பின்னர் மாணவியின் கைபேசிக்கு ஆபாச குறுந்தகவல்கள், ஆபாச படங்களை அனுப்பி வைத்ததுடன், அடிக்கடி கையடக்கத் தொலைபேசியில் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதாகவும், தன்னுடைய வீட்டுக்கு தனியாக வரும்படியும் ஏராளமான மாணவிகளிடம் கூறி வந்துள்ளார்.

இது தொடர்பில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறினார். அந்த மாணவியை போன்று மற்ற மாணவிகளும் பெற்றோரிடம் தெரிவித்தார்கள்.

இதனையடுத்து உடனடியாக 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாடசாலைக்கு திரண்டு சென்றனர். மேலும் பாடசாலைக்குள் புகுந்து தலைமை ஆசிரியரை பிடித்து தாக்க முயன்றனர். அதற்குள் சம்பவம் அறிந்து பாடசாலைக்கு பொலிஸார், விரைந்து வந்து குறித்த தலைமை தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

The post பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் கைது! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply