இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் தேவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதியை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அவர் கோரிக்க விடுத்தள்ளார்.
அத்தோடு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இடையே சுகாதார அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பில்,
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதி தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.மேலும் ஒட்சிசன் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பதால் இந்தியா இதில் அதிக கவனம் செலுத்தும் என்று நம்புவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை தணிப்பதில் இரு நாடுகளும் ஒரு சவாலை எதிர்கொள்கின்றன. நட்பு நாடுகளாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவாலான முறைகள் குறித்த நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொள்வது மிக முக்கியம் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இதன் போது சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.





