முழு சம்பளத்தையும் வழங்க முடியாது; அவ்வாறு வழங்கினால் என்னால் உயிர் வாழ முடியாது – டிலான் பெரேரா

கொரோனா வைரஸ் ஒழிப்பு நிதியத்திற்கு தனது முழு சம்பளத்தையும் வழங்க முடியாது அவ்வாறு வழங்கினால் என்னால் உயிர் வாழ முடியான பதுளை மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பில் உள்ள பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் பாராளுமன்ற சம்பளம் மாத்திரமே தனக்கு எஞ்சியுள்ளதாகவும் அதில் முழுவதையும் வழங்க முடியாதுனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஒரு சட்டத்தரணி என்றாலும் அதனை தொழிலாக செய்வதில்லை என்பதால் பாராளுமன்ற சம்பளத்தை வைத்தே வாழ்க்கைச் செலவை கவனிப்பதாகவும் சமூக பொறுப்பு கருதி 50% சம்பளத்தை வழங்க முடியுமெனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தான் சேர்த்து வைத்த பணத்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து வைத்திருந்ததாகவும் குறித்த நிறுவனம் நட்டத்தில் சென்றதால் பணமும் பறிபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச ஊழியர்களிடம் சம்பளம் கேட்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலை இப்படி என்றால் அரச ஊழியர்களின் நிலை என்னவாக இருக்குமென டிலான் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *