2.5 கோடியை மக்களுக்கு பகிர்ந்தளித்த வர்த்தகர்

இலங்கையில் பிரபல வர்த்தகர் ஒருவர், 2.5 கோடி ரூபா பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தல் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு களனி பகுதியில் உள்ள தனிநபரொருவர் பகிர்ந்தளித்துள்ளார்.

களனி பகுதியைச் சேர்ந்த C.மஞ்சுள பெரேரா என்ற வர்த்தகரே, இவ்வாறு பணத்தை மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார்.

ஹுனுபிட்டி − நாஹேன பகுதி மக்களுக்கு தலா 1000 ரூபா விகிதம், இந்த இரண்டரை கோடி ரூபா பணத்தையும் பகிர்ந்தளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில சமூக சேவையாளர்களும் உதவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply