தண்ணீர் கேட்டு சென்று பெண்ணை துஸ்பிரயோகம் செய்த இளைஞன்…!samugammedia

வெசாக் போயா தினமான நேற்று, வீட்டில் யாருமற்ற நிலையில், 47 வயதுடைய பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில்,

27 வயதுடைய இளைஞர் ஒருவரை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்தவர்.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்த இளைஞன், வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து,

சம்பந்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அப்போது, ​​பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்த போதும், இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply