கொரோனா வைரஸ் தொற்றால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 பேருமாக 10 பேர் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் உயிரிழந்தனர்.
அத்தோடு யாழ்ப்பாணம் மருதடி ஒழுங்கையைச் சேர்ந்த 75 வயது பெண், சங்கானையைச் சேர்ந்த 79 வயது ஆண், சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், கொக்குவிலைச் சேர்ந்த 82 வயது பெண், சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயது ஆண் ஒருவருமாக ஐவர் உயிரிழந்தனர்.
மேலும் இது தவிர, யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரி பிரிவில் 68 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று நால்வர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
ஒட்டுசுட்டான் – பெரியசாளம்பன் பகுதியைச் சேர்ந்த 68 வயது ஆண், சிலாவத்தை மாதிரி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது பெண், கணுக்கேணியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர், முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





