கொரோனா தொற்றினால் யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு!

<!–

கொரோனா தொற்றினால் யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு! – Athavan News

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யாழ்ப்பாணம் மருதடி லேனைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவரும் சங்கானையைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.


Leave a Reply