ஈஸ்டர் தாக்குதல்: சமூகத்தில் தவறான அபிப்பிராயம் நிலவுகின்றது – பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதலில் குறித்து பலரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தெரிவித்தார்.

இத்தகைய அறிக்கைகளை வெளியிடுபவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தின் முன் எடுத்துச் செல்லக்கூடிய உண்மைகளை மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு முன் சி.ஐ.டி.க்கு தகவல் வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

2019 ல் சஹரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் நடத்திய தாக்குதல் குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்டவை அல்ல என்றும், அது நன்கு திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல் என விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதல் குறித்த விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அது தொடர்பிலான தகவல்களை வௌிப்படையாக தெரிவிப்பதன் மூலம் வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *