“தொழில் வழிகாட்டல் வாரத்தை” முன்னிட்டு போட்டிகள்

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக “தொழில் வழிகாட்டல் வாரத்தை” இவ்வருடம் ஒக்டோபர் 04ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை நடாத்துவதற்கு மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை(Online) முறையினூடாகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு திறந்த போட்டிகளுமாக சித்திரம், கவிதை, கட்டுரை, பேச்சு, வினாடிவினா போட்டிகளை நடாத்த மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்ப முடிவுத்திகதி ஆகஸ்ட் 23ம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் online ஊடாக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு மாவட்ட செயலக மற்றும் தத்தமது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மேலதிக தகவல்களை பெற மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தருடன் 0768187069 தொலைபேசி இலக்கமூடாக தொடர்பு கொள்ள முடியும் என திருகோணமலை மாவட்ட செயலக மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *