பதுளை- ரிதிபான மலைப்பகுதியிலிருந்து மண்டையோடு மற்றும் மனித எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சருங்கல்கந்த என அழைக்கப்படும் குறித்த மலைப்பகுதிக்கு கொய்யாபழம் பறிக்கச் சென்ற சிறுவர்கள், இந்த மனித எச்சங்களை கண்டுள்ளதுடன், இவைத் தொடர்பில் தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று புதன்கிழமை இரவு (25) பதுளை பொலிஸாருக்கு பெற்றோர் தகவல் வழங்கியதையடுத்து, இன்று வியாழக்கிழமை காலை (26) சம்பவ இடத்தில் விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இதுசந்தேகத்துக்குரிய மரணம் என கருதி, விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்





