20 ​ஆணுறைகளுடன் சிக்கிய அழகிகள்..! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை samugammedia

பாணந்துறை பிரதேசத்தில் இரு பெண்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, சுமார் 20 ஆணுறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில், நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியை சுற்றி​வளைத்த பொலிஸார், பெண்கள் இருவர் உட்பட் நால்வரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்த நிலையத்தின் உரிமையாளர், வைத்தியர் எனக் கூறப்படும் நபர், விபசாரத்தில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்த பெண்கள் இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்கள் இருவரும் அகலவத்த மற்றும் பண்டாரகம பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர். அவர்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, ​​அந்த பைகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருந்தன என்றும் பொலிஸார் ​தெரிவித்தனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த ஆயுர்வேத மசாஜ் நிலையம் திறக்கப்பட்டது. 

ஒரு மூலோபாயவாதியை பயன்படுத்தி ஒரு மணிநேரத்துக்கு 2,000 ரூபாய்க்கு பெண்ணொருவரை விலைக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.  

Leave a Reply