கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் முதலாவது தடுப்பூசி பெற தவறிய 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்று (26.08.2021) மருதமுனை அல்-மனார் ஆரம்பப்பிரிவு பாடசாலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டன.
பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வருகைதந்து இந்த தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில் தடுப்பூசி ஏற்றுவதற்காக வரும் பொதுமக்களுக்கு தேவையான ஒத்துளைப்புக்களை சுகாதார பிரிவினரும் பாதுபாப்பு படையினரும் தொடர்ந்தும் வழங்கி வருகின்றனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணனின் வழிகாட்டலுக்கு அமைய காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 .00 மணி வரை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
இதேவேளை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கல்முனைக்குடி அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.





