இந்தியாவைப் போன்று இலங்கையும் மெல்ல மெல்ல பிணவறைகளால் நிரம்பி வழியும் நிலைக்கு உள்ளாகிவிட்டது.
வீதியோரங்களிலும், வீடுகளிலும் செத்து மடியும் அனாதைப் பிணங்களாக சடலங்கள் குவிக்கப்படுகின்றன.
எண்ணற்ற கொரோனா சடலங்களை எரிக்க இடம்மில்லாமல் டயர்கள் கொண்டு எரித்த நாடும் இலங்கையே.
கொரோனா வைரஸுக்கு அரசாங்கத்தையும் யாரையும் குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாம் நமது கடமையை செய்தால் இந்த கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியும். இதற்கு பணம் செலவாகாது, தேவையான சுகாதாரப் பாதுகாப்புக்கான அர்ப்பணிப்பு மட்டுமே. தயவுசெய்து கடவுளின் பெயரால் செய்யுங்கள் என்று பண்டாரகமவில் உள்ள சுடுகாட்டின் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அனைத்து சுடுகாடுகளும் நிரம்பி காணப்படும் தற்சமயத்தில் பண்டாரகம பிரதேசத்தினால் நிர்வகிக்கப்படும் அதுன்வென்னா சுடுகாட்டிற்கு நாங்கள் சென்றபோது உடல்கள் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மூன்று ஊழியர்கள் எங்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட கண்ணீரின் கதை வருமாறு,
சுடுகாடு உரிமையாளர் கூறுகையில்,
கொரோனா தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்னைய காலப்பகுதியில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சடலங்கள் இந்த சுடுகாட்டுக்கு வந்தன. அதுவும் அருகிலுள்ள கிராமங்களில் வாழும் நமக்குத் தெரிந்தவர்களின் சடலங்கள் தான் இங்கே வந்தன.
தற்போது பல கிராமப்புறங்களில் இருந்து எங்களுக்கு யார் என்றே தெரியாத நபர்களின் உடல்களை தகனம் செய்ய கொண்டு வருகிறோம். அந்த உடல்கள் எங்கிருந்து வந்தாலும், இவை எங்கள் பெற்றோரின் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை. இந்த வைரஸை நோக்கி அரசாங்கமோ அல்லது யாரோ விரல் நீட்டினால் பயனில்லை. இதை யாரும் கொண்டு வரவில்லை. இது வெறும் கண்ணுக்குத் தெரியாததும் கூட. நாம் செய்ய வேண்டியது பாதுகாப்புடன் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமே.
இதை அரசு சுகாதாரத் துறை அதிகாரிகளை மட்டும் செய்ய விடாமல் நாங்கள் எங்கள் கடமையை செய்வோம். அத்துடன் முடிந்தவரை பாதுகாப்பாக ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்தால், நம் உயிரை மட்டுமல்ல, மற்றவர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான். என தெரிவித்தார்.
சுடுகாடு சேவையாளர் கூறுகையில்,
மூன்று நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸால் இறந்த ஒரு இளம் மனிதனின் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது மனைவியும் இரண்டு சிறு குழந்தைகளும் சுடுகாட்டின் வாயிலில் அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்த பெண்மணியும் இரண்டு குழந்தைகளும் வலியால் அலறினார்கள், ஆனால் எனது 15 வருட சேவையின் போது நான் இந்த அளவு சோகமாக உணரவில்லை. தயவுசெய்து கவனமாக இருங்கள், கவனமாக இருங்கள், கடவுளின் பெயரால் கவனமாக இருங்கள்- என்றார்.
சுடுகாடு உதவியாளர் கூறுகையில்,
தினமும் தொலைக்காட்சியில் தாய்மார்கள், தந்தை, அத்தை, மாமா, மருமகன் கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அழிவுகளை இறப்புக்களை தொலைக்காட்சியில் மற்றும் பல உறவுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை பார்க்கின்றோம். நான் சொல்ல வேண்டியது இது தான். கடவுளின் பெயரால் வீட்டில் இருங்கள். இப்போது நாங்களும் மிகவும் சோர்வாக கவலையாக இருக்கிறோம். மேலும் இதை எங்களால் தாங்க முடியாது. இப்போதவதவது நாங்கள் சொல்வதை கேளுங்கள் என தெரிவித்தார்.
எனவே, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியதும் தற்கால தேவையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.





