இலங்கையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சுயதனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வந்த 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருள்கள் பொதி, வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மட்டும் வழங்குவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
குறித்த தகவலை பிரதமரின் மேலதிக செயலாளர், சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக சுயதனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருள்களின் பொதி வழங்கப்பட்டு வந்தது.
எனினும் நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சுமை காரணமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மட்டும் இந்த அத்தியாவசிய உணவுப் பொதியை வழங்குவது என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக சுயதனிமைப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசியப் பொருள்களின் பொதி வழங்கும் முன்னைய இரண்டு சுற்றறிக்கைகளுக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





