தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து நீலிகா மாலவிகே வெளியிட்ட புதிய தகவல்!!

கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே, தமது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்தாத 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்பு, தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களை விட 8.1 மடங்கு அதிகம் என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

50 வயதிற்கு குறைந்த, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களின் மரணமானது, சினோபோர்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களைவிட 3.8 மடங்கு அதிகமாகும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு தடுப்பூசிகளின் முடிவுகளும் டெல்டா மாறுபாட்டிற்கு முன்னும் பின்னும் தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது இந்த இறப்புகளைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *