கொரோனா தொற்றினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்குவதற்காக கிண்ணியா பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்பட்ட இடம் இன்று (26) செப்பனிடப்பட்டது.
இந்த இடம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, குறிஞ்சாகேணி சுகாதார பிரிவில் வட்டமடு எந்த கிராமத்தில் அமைந்துள்ளது.
கிண்ணியா பிரதேச செயலாளர் ஏ.எம்.அனஸ், கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் முகம்மது நிகார், கிண்ணியா இராணுவப் படை அதிகாரி மேஜர் திஸ்ஸனாயக்கா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் ஜனாஸாக்களை இதுவரை ஓட்டமாவடி மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டடு வந்தது.
எனினும் அங்கு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டதனால் கிண்ணியாவில் இந்த இடம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது





