கொரோனா தொற்றில் இருந்து 350,000 மேற்பட்டோர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 139 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 4 இலட்சத்து 7 ஆயிரத்து 768 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்றினால் இதுவரையில், 7 ஆயிரத்து 948 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *