
நாட்டின் கல்வி செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு, ஜனாதிபதியினால் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா, யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தரான பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா உள்ளிட்ட 31 புதிய உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.




