திருகோணமலை மாவட்டத்தில் மூவினத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 300 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராஸிக் றியாஸ்தீன் அவர்களினால் வழங்கப்படவுள்ளது.
இதற்கான 4,930,881 ரூபா காசோலை ராஸிக் றியாஸ்தீன் அவர்களினால் தேசிய நீர் வழங்கள் திருகோணமலை காரியாலயத்தில் வைத்து கணக்காளர் நிஜாமுதீனிடம் கையளிக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது





