
அடுத்த மாதம் முதல் இரண்டு வகையான கரிம உரங்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக கரிம உர உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் வழங்கல் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மகேஷ் கம்மன்பில கூறுகையில், நாட்டிற்குத் தேவையான முழு கரிம உரத்தையும் உற்பத்தி செய்ய இயலாது என்பதால் இந்த தற்காலிக நடவடிக்கையாக நாடு இந்த உரங்களை இறக்குமதி செய்கிறது என குறிப்பட்டார்.




