கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இளம் தம்பதியினர் உயிரிழந்த சோக சம்பவம் கிரிபத்கொட பகுதியில் பதிவாகியுள்ளது.
அதன்படி, 36 வயதுடைய தனஞ்செய அனுருத்த என்ற ஆங்கில ஆசிரியரும்,அவரது 27 வயதுடைய மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அவர்களின் ஐந்து வயது மகள் தனது பெற்றோரை இழந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளார்.
அவ்வாறு உயிரிழந்த தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி நேற்று (25) காலை மரணமடைந்துள்ளதா கூறப்படுகின்றது.





