சிலாபத்தில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுது்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சுகாதார துறையைச் சேர்ந்த இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனதகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வைத்தியர் ஒருவரும், குடுபம்நல சுகாதார உத்தியோகத்தர் ஒருவருமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.
மேலும் இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு நாட்டில் 18 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





