கொரோனா ஆபத்தான நோய் அல்ல, சாதாரண காய்ச்சல் தான் – ஆளும் கட்சி MP, SB திஸாநாயக சர்சை பேச்சு

கொரோனா தொற்று என்பது ஆபத்தான நோய் அல்லவெனவும் அது சாதாரண காய்ச்சலே என ஸ்ரீலங்காபொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களில் 81 சதவீதமானவர்கள் எவ்விதமானசிரமங்களும் இன்றி பூரண குணமடைவதாகவும், 14 சதவீதமானவர்கள் மட்டுமே காய்ச்சல் இருமல்போன்றவற்றால் சிறிது சிரமத்திற்கு உள்ளாகி பின்னர் குணமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் மரணமானது இன்னும் 1.9 வீதமாகவே காணப்படுவதாகவும்எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

Leave a Reply