விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழக்க முன்னர் தனது சிறுநீரகங்களை தானமாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவமொன்று அனைவராலும் பேசப்பட்டு வந்தது.
இணுவில், தியேட்டர் வீதியை சேர்ந்த 29 வயதுடைய பிரிஞ்சன் எனும் இளைஞரே இவ்வாறு சிறுநீரகங்களை தானம் செய்தவராவார்.
குறித்த சத்திர சிகிச்சையானது கடந்த 18-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்த கொரோனா சூழலுக்கு மத்தியில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மூளை இறந்த நிலையிலிருந்த இந்த இளைஞனின் சிறுநீரகத்தை இரண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பொருத்தி தற்பொழுது அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்.
எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக சுயவிருப்பின் பேரில் தனது சிறுநீரகங்களை தானம் செய்திருந்தார்.
தான் இறந்த நிலையிலும் இரண்டு உயிர்களை வாழ வைக்கும் அந்த இளைஞனை அனைவரும் நினைவுகூர்வதோடு பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சமூகம் நன்றியினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





