தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16ஆயிரத்து 416 ரூபாவினை அறவிட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு குறித்த கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளும் நபர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வதற்கு முன்னர் அவர் செல்லும் நாட்டிற்கு அமைய தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவர்கள் தொழிலுக்காகதான் வௌிநாடு செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தடுப்பூசி வேலைத்திட்டதில் இவர்களை இணைத்துக் கொள்ள முடியாதென வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய குறிப்பிட்டார்.





