நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர

நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய அரசியல் தலைவர் மங்கள சமரவீர என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக ஊடக அறிக்கை ஒன்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் வெளியிட்டுள்ளார்

மேலும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் மங்கள சமரவீர இந்த நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்திய ஒரு நல்ல அரசியல் தலைவர், அவரின் இழப்பு நாட்டின் அனைத்து சமூகங்களுக்குமான இழப்பு.

இனவாதிகள் அதிகமுள்ள இந் நாட்டில் மங்கள சமவீர போன்ற தலைவர்களே தேவையானவர்கள். சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாசைகளையும் பிரச்சினைகளையும் பெரும்பான்மை சமூகங்களும் அச் சமூகத்தின்பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாட்டில் ஒரு போதும் அமைதி ஏற்படாது என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த ஒரு அரசியல் தலைவரை நாடு இந்தநேரத்தில் இழந்திருப்பது மிகவும் துரதிஸ்டமானது என்று அவரது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *