சுகாதார அமைச்சினால் கொரோனா தொடர்பான போலியான தரவுகள் எந்த சந்தர்ப்பத்திலும் வௌியிடப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், கால தாமதம் மற்றும் சில தொழிநுட்ப காரணமாக ஏற்படும் சிறு மாற்றங்கள் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சிலர் முன்வைப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (26) சுகாதார அமைச்சில் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.





