கொரோனா நியூமோனியா நிலைக்கு சென்று உயிராபத்தை எதிர்கொள்ளும் நபர்களை காப்பாற்றவென பயன்படுத்தப்படும் டொசிலியுபாம் மருந்து நாளை 28ம் திகதி இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து குறித்த மருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
டொசிலியுபாம் மருந்துக்கு நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த 17ம் திகதி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் கூறியபோது இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அதனை கேலி செய்யும் வகையில் பேசியதுடன் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் கூறியிருந்தார்.
எனினும் அதன்பின் நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்ட போது சுகாதார அமைச்சர் அதனை ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் டொசிலியுபாம் மருந்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவிடமும் இந்த மருந்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது





