
2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி, விண்ணப்ப கால அவகாசம் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.




