ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருணா சவால்

<!–

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருணா சவால் – Athavan News

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக இருந்தவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரிடம் சவால் விடுத்துள்ளது.

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அண்மையில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்த கருத்து குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா இவ்வாறு கூறினார்.

ஆகவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply