
கோவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ‘ரீகன் கோவ்’ என்ற மருந்தை இறக்குமதி செய்யாமைக்கு அரசியல் செல்வாக்கு தான் காரணம் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரீகன் கோவ், என்ற மருந்தை பாவித்த நோய்வாய்ப்பட்ட நோயாளிகளில் 31 சதவீத விகிதம் மீண்டுவந்துள்ளதாக தெருவிக்கப்பட்டுள்ளது.
இது உயிருக்கு ஆபத்தான நோயாளிகளின் ஆபத்தை 81 சதவிகிதம் குறைக்கிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகள் இந்த மருந்தை பாவிக்க ஒப்புதல் அளித்துள்ளன.
ரீகன் கோவ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு வழங்கப்பட்டது.
இந்த மருந்தை இறக்குமதி செய்ய உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒரு தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. எனினும், அரசியல் செல்வாக்கு காரணமாக ஒப்புதல் திடீரென ரத்து செய்யப்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.




