
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறப்பு இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் கடந்த சில வாரங்களில் கோவிட் தொற்று உள்ள சுமார் 20 நோயாளிகளுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்துள்ளனர்.
மூன்றாவது அலையில் அடையாளம் காணப்பட்ட கோவிட் டெல்டா மாறுபாட்டின் பக்க விளைவு என டாக்டர். கோத்தபாய ரணசிங்க தெரிவித்தார்.
முதல் மற்றும் இரண்டாவது கோவிட் அலைகள் மாரடைப்பு நோயாளிகளுக்கு இத்தகைய போக்கைக் காட்டவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது மூன்றாவது அலையில் தோன்றிய கோவிட் டெல்டா மாறுபாட்டின் சிக்கல் உள்ளதாக கூறிப்பிட்டார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைய வயதினரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இது பொதுவாக மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
சில கோவிட் நோயாளிகளின் முக்கிய அறிகுறிகள் மற்ற இருதய நோயாளிகளின் அறிகுறிகளைப் போல காணப்படவது இல்லை என அவர் கூறினார்.
ஒருவர் இளமையாக இருந்தாலும், அவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், அவர் தாமதிக்காமல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அறிக்கையிடப்பட்ட டெல்டா வகை காரணமாக இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து அவரும் அவரது குழுவும் ஒரு சிறப்பு ஆராய்ச்சி ஆய்வைத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
24 ஆம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் நோயாளியின் உயிரை அவரும் அவரது குழுவும் காப்பாற்ற முடிந்தது என்று நிபுணர் டாக்டர் கோத்தபாய தெரிவித்தார். .