மன்னார் தமிழர் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு

ம‌ன்னா‌‌ரி‌ன் பறப்பாங்கண்டல் பகுதியில், சட்டவிரோதமாக காடுகளை அழித்துக் கொண்டிருந்த இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின் கீழ், குறித்த வனப்பகுதியில் போலி உரிம பத்திரம் மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ இயந்திரம் போன்றவற்றுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறப்பாங்கண்டல் பகு‌தி‌யி‌ல் காணப்படுகின்ற காட்டை அழிப்பதாக, உரிய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *