இந்தியாவை எச்சரிக்கும் தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என தலிபான்களின் முக்கிய தலைவரான  Shahabuddin Dilwar எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் நிரூபர் ஒருவரிடம் பேசிய அவர் தலிபான்கள் அரசாங்க விவகாரங்களை சுமூகமாக நடத்த முடியும் என்பதை இந்தியா விரைவில் அறிந்துகொள்ளும் எனவும்  தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது எனத் தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானின் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தமைக்காக பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் பரஸ்பர மரியாதை அடிப்படையில் அனைத்து நாடுகளுடனும் அமைதியான உறவை விரும்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply