தருமபுர பொலிஸ் புலநாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலை அடுத்து தருமபுர பிரிவுற்குப்பட்ட மாயவனுர் பகுதியில் இன்றையதினம் சட்டவிரோத கசிப்பு உற்ப்பத்தியிலிடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் அவரிடமிருந்து 42லீற்றர் கசிப்பும் கசிப்பு உற்ப்பத்திக்கு பயன் படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸ் புலநாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை புதுக்காடு இரமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனையிலிடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 21 லீற்றர் கசிப்பும் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள் தருமபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.