கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை

இன்று 27 ம் திகதி லிந்துலை சுகாதார அத்தியட்சகர் பிரிவில் உள்ளடக்கப்பட்ட அக்கரபத்தனை மன் ராசி, நாக சேனை , போபத்தலாவ , பசுமலை அடங்கலாக 9 தோட்டங்களை சேர்ந்த சுமார்( 500.) 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு Covid-19 தொற்று பரவாமல் இருக்க முதலாம் கட்ட ஊசியை வழங்கியுள்ளதாக அக்கரப்பத்தனை பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில் நேற்று முன் தினம் அக்கரபத்தனை பகுதியில் 90 பேருக்கு செய்த பிசிஆர் பரிசோதனையில் 45 தொற்றாளிகள் என இனம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் அக்கரப்பத்தனை பொது சுகாதார அதிகாரி பிரிவில் மூன்று குழந்தை தொழிலாளிகள் மரணித்துள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து அக்கரப்பத்தனை பகுதிகளில் உள்ள மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் முகக் கவசம் இன்றி நடமாட வேண்டாம் எனவும் , இப்போதைய காலகட்டத்தில் பெருந்தோட்ட துறையில் பணிபுரிவோரே தவிர்ந்த ஏனையோர் வெளியே நடமாட வேண்டாம் என அவர் வினயமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *