கொரோனா தொற்றாளரா என்பதனை வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து, அதனை அடையாளம் கண்டுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும் இதன்படி, வீட்டிலேயே பரிசோதனைகளை நடத்தும் ரெபிட் அன்டீஜன் நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கொழும்பில் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டிலேயே கொரோனா பரிசோதனைகளை செய்துக்கொள்ளக்கூடிய ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி, தமக்கு விரைவில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.