தீக்காயங்களுக்கு உள்ளாகி சிறுமி ஹிஷாலினி மரணித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மாமனார் விடுத்த பிணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனு ஒன்றின் ஊடாக அவரது சட்டத்தரணியினால் இந்த பிணை கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்தோடு சந்தேகநபருக்கு கொரோனா வைரஸ்தொற்று உறுதியுள்ளதாக அறிவித்து இந்த பிணை கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளமையினால் மாத்திரம் பிணை வழங்க முடியாதென அறிவித்த கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
மேலும் இச் சந்தேகநபருக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.