தமிழீழ சுதந்திர சாசன கிண்ணத்தை வெல்லப்போவது யார் ? களத்தில் 10 அணிகள்!

அமெரிக்காவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வெற்றிக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட அணிகள் ஆடுகளம் காண இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மலரும் தமிழீழம் எத்தகைய கொள்கை நிலைப்பாடுகளை கொண்டதாக அமையும் என்பதனை வலியுறுத்தி, அனைத்துலக சமூகத்தினை நோக்கி 2013ம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டிருந்தது.

இச்சாசனை அடையாளப்படுத்தும் வகையில் ‘தமிழீழ சுதந்திர சாசன வெற்றிக்கிண்ணம்’ ஆண்டுதோறும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடக்கி நிலைக்கு பின்னராக வரும் ஞாயிற்றுக்கிழமை இக்கிண்ணத்துக்கான இரு விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்றன.

கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய இரு போட்டிகளில் 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்ற இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிலடெல்பியா, Albert C. Miller Park, 220 Miller Way, Exton, PA 19341 விளையாட்டுத் திடலில் இடம்பெற இருக்கின்ற இப்போட்டியானது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்நிகழ்வில் பிரபல ஒவியர் சாண் சுதந்தரம் அவர்கள், உயிர்ப்புள்ள கலைவடிவமான ஓவியக்கலையினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறார்களுக்கான ஓவியபட்டறை ஒன்றினை நடத்த இருக்கின்றார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *