இலங்கைக்கு மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பெற்றுள்ளன

சீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன.

அதாவது, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சீனோபோர்ம் தடுப்பூசிகளுமே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

இதற்கமைய இந்த மாதத்தில் மாத்திரம் 18 மில்லியன் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் மிகவும் பரவலாக சீனோபோர்ம் தடுப்பூசியை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *